ETV Bharat / sports

GT Vs MI: சுழலும் குஜராத்.. திணறும் மும்பை - மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2023 போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில், 208 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இது வரையிலான 14 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

GT Vs MI: சுழலும் குஜராத்.. திணறும் மும்பை

author img

By

Published : Apr 25, 2023, 7:42 PM IST

Updated : Apr 25, 2023, 10:52 PM IST

அகமதாபாத்: ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் 2023 போட்டியின் 35வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் அரை சதம் கடந்து 56, டேவிட் மில்லர் 46, அபினவ் மனோஹர் 42 என அதிகபட்ச ரன்களில் ஆட்டம் இழந்தனர். மேலும், ராகுல் டிவாட்டியா 20 மற்றும் ரஷித் கான் 2 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், அர்ஜூன் டெண்டுல்கர், ஜாசன் பெஹ்ரெண்டெர்ஃப், ரிலே மெர்டித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகிய வீரர்கள் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 208 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேமரூன் கிரீன் 33, சூர்யகுமார் யாதவ் 23 என்ற அதிகபட்ச ரன்களில் ஆட்டம் இழந்தனர். முக்கியமாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 2 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். இதனால் 14 ஓவர்கள் வரையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் உடன் மும்பை விளையாடி வருகிறது. அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் நூர் அகமது 3, ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இன்றைய பிளேயிங் 11இல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டிவாடியா, அபினவ் மனோஹர், ரஷித் கான், நூர் அகமது, முகம்மது ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் விளையாடினர்.

அதேபோல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், குமார் கார்த்திகேயா சிங், நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா, அர்ஜூன் டெண்டுல்கர், ஜாசன் பெஹ்ரெண்டெர்ஃப் மற்றும் ரிலே மெர்டித் ஆகிய வீரர்கள் களம் கண்டனர்.

மேலும், இதுவரையிலான ஐபிஎல் 2023 லீக் ஆட்டத்தில் 6 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 வெற்றி - 2 தோல்வி என 4வது இடத்திலும், 6 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 வெற்றி - 3 தோல்வி என 7வது இடத்திலும் புள்ளிப் பட்டியலில் உள்ளது.

இதையும் படிங்க: GT vs MI: 'பில்டிங் ஸ்ட்ராங்கு; பேஸ்மட்டம் வீக்கு': பவுலிங்கில் தேறுமா மும்பை?

Last Updated : Apr 25, 2023, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.