ETV Bharat / sports

GT vs MI: 'பில்டிங் ஸ்ட்ராங்கு; பேஸ்மட்டம் வீக்கு': பவுலிங்கில் தேறுமா மும்பை?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்க உள்ளது குஜராத் அணி. அதேநேரம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது மும்பை.

today IPL
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : Apr 25, 2023, 9:29 AM IST

ஹைதராபாத்: விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 25) நடைபெறும், 35வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 4 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

சீறும் டைட்டன்ஸ்: லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த ஆட்டத்தில், குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சஹா 47 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும், நடப்பு சீசனில் தனது பங்களிப்பை சிறப்பாகவே கொடுத்து வருகிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 228 ரன்களை குவித்துள்ளார். சராசரி 38 ரன்கள் ஆகும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசினார். இதே ஃபார்மில் அவர் விளையாடினால், குஜராத் அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும். டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, விஜய் சங்கர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். இன்றைய போட்டி ஐபிஎல்-ல் அவர் விளையாடும் 100வது ஆட்டம் ஆகும். லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா கச்சிதமாக பந்துவீசி வெற்றி தேடி தந்தார். அவரிடம் அதே ஆட்டத்தை இன்றும் எதிர்பார்க்கலாம். ரஷீத் கான் சுழலும் அணிக்கு வலுசேர்க்கிறது. ஜோஸ்வா லிட்டில், ஜெயந்த் யாதவ், ஸ்ரீகர் பரத், சாய் சுதர்சன், ஷிவம் மாவி ஆகியோர் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் உள்ளனர். அத்துடன் இன்றைய போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம்.

பந்துவீச்சு கவலை: மும்பை அணியில் பேட்டிங் ஓரளவுக்கு வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு மோசமாக உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர், பெஹ்ரன்டார்ஃப், கேமரூன் க்ரீன், ஆர்ச்சர் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக அர்ஜூன் டெண்டுல்கர் 3 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதில் 4 வைட், ஒரு நோ பால் அடங்கும். பந்துவீச்சில் அவர் இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். எனினும் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஷ் சாவ்லா, ஷோகீன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா, கேமரூன் க்ரீன் நம்பிக்கை தருகின்றனர். சூர்யகுமார் யாதவ் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 26 பந்துகளில், 57 ரன்களை விளாசினார். டிம் டேவிட், திலக் வர்மா பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால், நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

அகமதாபாத்தில் போட்டி: மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேருக்கு நேர்: மும்பை - குஜராத் அணிகள் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

குஜராத் உத்தேச அணி: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், மோகித் சர்மா.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், ஷோகீன், பியூஷ் சாவ்லா, அர்ஜூன் டெண்டுல்கர், பெஹ்ரென்டார்ஃப், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.