ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் 45 ரன்களும், கில் 43 ரன்களும் அடித்தனர்.டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், லலித் யாதவ் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், களத்தில் இறங்கிய டெல்லி அணியில், தொடக்க வீரர்கள் ப்ரித்வி-தவான் அதிரடி காட்டினர். இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 132 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வழிவகுத்தது. சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் குவித்து வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்தாலும், தேவையான ரன்கள் எளிதாக டெல்லி கைவசம் கிடைத்தது. 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு டெல்லி கேப்பிட்டல் அணி முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: IPL 2021 RR VS MI: ராஜஸ்தானை வீழ்த்தி ஃபார்முக்கு திரும்பிய மும்பை; டி காக் அரைசதம்