ETV Bharat / sports

டெல்லி அணியில் மீண்டும் கரோனா... சிஎஸ்கே போட்டி ரத்தாக வாய்ப்பு... - சென்னை vs டெல்லி மேட்ச்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

dc-players-forced-into-isolation-after-net-bowler-tests-positive-for-covid-19

author img

By

Published : May 8, 2022, 5:08 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 8) 7:30 மணிக்கு டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக டெல்லி அணியின் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி-சென்னை இடையேயான போட்டி நடைபெறுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் சீசன் தொடக்கத்தில், பேட்ரிக் ஃபார்ஹார்ட், மிட்செல் மார்ஷ், டிம் சீஃபர்ட் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், டெல்லி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், புனேவில் நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், இரண்டாவது முறையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: CSK vs DC: இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.