ETV Bharat / sports

CSK vs DC: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா Yellow Army?... தோற்றால் என்ன நடக்கும்? - சென்னை டெல்லி அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அணியை எதிர்கொள்ளும் சென்னையும், கொல்கத்தாவை சந்திக்கும் லக்னோ அணியும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். ஒரு வேளை இரு அணிகளும் தோல்வியடைந்தால், பிற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க நேரும்.

Today IPL
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 20, 2023, 2:02 PM IST

டெல்லி: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நாளையும் (மே 21) 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று பிற்பகல் நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னேறுமா சிஎஸ்கே?: நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 15 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியும் 15 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், சென்னை அணியின் நிகர ரன் ரேட்டை(0.381) விட குறைவாக உள்ளதால் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திவிட்டால் சென்னை அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். மேலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிச் சுற்று 1-க்கு முன்னேறிவிடும்.

ஒருவேளை சென்னை அணி தோல்வி அடைந்தால், பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும். சென்னை அணியின் பேட்டிங்கில் கான்வே (498), கெய்க்வாட் (425), ரஹானே ஆகியோர் வலுசேர்க்கின்றனர். ஷிவம் துபே நம்பிக்கை தருகிறார்.

அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா கூடுதல் பங்களிப்பை தருவது அவசியம். கடைசி கட்டத்தில் களம் இறங்கும் கேப்டன் தோனி, தன்னால் முடிந்தளவுக்கு ரன்களை சேர்க்கிறார். பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே, பதிரனா டெத் ஓவர்களை சிறப்பாக வீசுகின்றனர். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடினால், டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

டெல்லி அணியை பொறுத்தவரை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். கேப்டன் வார்னர், ரோசோவ், சால்ட் ஃபார்மில் உள்ளனர். ப்ரித்வி ஷா பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசி மீண்டு வந்துள்ளார். பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, நார்ஜியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார்கள்.

ஆட்டம் எங்கே?: சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் லீக் ஆட்டம், டெல்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை உத்தேச அணி: கான்வே, கெய்க்வாட், ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், தீக்சனா, பதிரனா, தேஷ்பாண்டே.

டெல்லி உத்தேச அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, ரோசோவ், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அமன் கான், யஷ் துல், குல்தீப் யாதவ், நார்ஜியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

Kolkatta vs Lucknow
கொல்கத்தா vs லக்னோ

கொல்கத்தா vs லக்னோ : இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ அணி, கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மேலும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோற்றுவிட்டால், லக்னோ அணி டாப்-2க்குள் சென்றுவிடும். ஒருவேளை கொல்கத்தா அணியிடம் லக்னோ தோற்றால், மும்பை அல்லது பெங்களூரு அணி தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். அப்படி நடந்தால் தான் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

கடைசியாக மும்பை அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி காக், கேப்டன் க்ருணல் பாண்ட்யா நிலைத்து நின்று ஆட வேண்டும். ஸ்டொய்னிஸ், பூரன் அதிரடியில் மிரட்டுகின்றனர். பந்துவீச்சில் மொசின் கான், யஷ் தாகூர், ரவி பீஷ்னோய் வலுசேர்க்கின்றனர்.

அதேநேரம் கொல்கத்தா அணியையும் சாதாரணமாக கருதிவிட முடியாது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய், குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் விரைவில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். மிடில் ஆர்டர் வலுவாக இருப்பது கொல்கத்தா அணிக்கு பிளஸ். சுழற்பந்து வீச்சில் சுயாஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, நரேன் கூட்டணி நம்பிக்கை அளிக்கிறது.

போட்டி எங்கே?: கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஆட்டம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய், குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆந்த்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரேன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

லக்னோ உத்தேச அணி: குயின்டான் டி காக், தீபக் ஹூடா, மான்கட், க்ருணல் பாண்ட்யா (கேப்டன்), ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், ரவி பீஷ்னோய், ஸ்வப்னில் சிங், மொசின் கான், யஷ் தாகூர்/அமித் மிஸ்ரா.

இதையும் படிங்க : RR VS PBKS: அடுத்த சுற்று வாய்ப்பை கோட்டைவிட்ட பஞ்சாப்.. தப்பி பிழைத்த ராஜஸ்தான்! என்னாகப் போகுதோ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.