சென்னை : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஹேரி ப்ரூக் மற்றும் அபிஷேக் சர்மா ஐதாராபாத் அணியின் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி ப்ரூக் (18 ரன்) ஆகாஷ் சிங் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஐதராபாத் அணியின் ஸ்கோர் மந்தைவேகத்தில் நகர்ந்தது.
அபிஷேக் சர்மா 34 ரன், ராகுல் திரிபாதி 21 ரன், கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன் விக்கெட் கீப்பர் கிளெஸ்சன் 17 ரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேக்ரோ ஜென்சன் மட்டும் 17 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இறுதி பந்தை பக்கவாட்டில் அடித்து விட்டு ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய வாஷிங்டன் சுந்தரை கேப்டன் டோனி தனகே உரிய பாணியில் கூலாக ரன் அவுட் செய்து சொந்த ஊர் ரசிகர்களை உற்சாக மழையில் நனையச் செய்தார். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங், தீக்ஷேனா, மத்திஸா பத்திரனா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
134 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டத்தை ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டிவென் கான்வாய் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.
11வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட் (35 ரன்) அநாவசியமாக ரன் அவுட்டாகினார். கெய்வாட்டை, உம்ரான் மாலிக் அற்புதமாக ரன் அவுட் செய்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா 9 ரன்கள் மட்டும் எடுத்துக் கொடுத்து நடையை கட்டினர்.
அதேநேரம் மறுமுனையில் நின்ற மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிவென் கான்வாய் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டி அரை சதம் கடந்தார். 18 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 138 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வெற்றி கண்டது.
தொடக்க வீரர் டிவென் கான்வாய் 1 சிக்சர் 12 பவுண்டரி என 77 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். உள்ளூர் மண்ணில் டோனி களமிறங்காதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது. 3 விக்கெட் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
-
In his own style, @msdhoni describes yet another successful day behind the stumps 👏
— IndianPremierLeague (@IPL) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
And along with it, shares a special Rahul Dravid story and admiration for @sachin_rt 😃#TATAIPL | #CSKvSRH pic.twitter.com/4gL8zU9o9v
">In his own style, @msdhoni describes yet another successful day behind the stumps 👏
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
And along with it, shares a special Rahul Dravid story and admiration for @sachin_rt 😃#TATAIPL | #CSKvSRH pic.twitter.com/4gL8zU9o9vIn his own style, @msdhoni describes yet another successful day behind the stumps 👏
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
And along with it, shares a special Rahul Dravid story and admiration for @sachin_rt 😃#TATAIPL | #CSKvSRH pic.twitter.com/4gL8zU9o9v
இதையும் படிங்க : KKR VS DC : டெல்லி அணி முதல் வெற்றி - கொல்கத்தாவுக்கு தொடரும் பரிதாப நிலை!