சென்னை : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சென்னை அணியில் ஷிவம் துபே 25 ரன், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்கள் குவித்தனர்.
168 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி டெல்லி அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருக்கின்றன. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சென்னை வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர்.
18 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து உள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் இன்னும் 48 ரன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் கைவசம் வெறும் இரண்டு ஓவர்கள் மட்டுமே உள்ளன. இதனால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.
இதையும் படிங்க : RCB Vs MI: 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!