துபாய்: ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது.
இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இந்த இரண்டாம் கட்டப் போட்டிகள் செப். 19ல் தொடங்கின.
ரூ. 12 லட்சம் அபராதம்
தொடரின் 32ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று (செப். 21) எதிர்கொண்டது.
கடைசி ஓவர் வரை நடைபெற்ற இப்போட்டியை, ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெறும் 1 ரன்னை மட்டும் கொடுத்து, வெற்றிக்கு வழிவகுத்த கார்த்திக் தியாகி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது போட்டி விதிகளுக்கு எதிரானது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக இந்தத் தவறை செய்வதால், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபாரதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: IPL 2021: நடராஜனுக்கு கரோனா; நடக்குமா இன்றையப் போட்டி?