மும்பை: நேற்று (ஏப்.19) நடந்த ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்றைய போட்டியானது, ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனிக்கு கேப்டனாக 200ஆவது போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு தோனி கூறியதாவது," நாம் விளையாடும்போது, முழு உடற்தகுதியுடன் ஆடவே விரும்புவோம். எல்லா போட்டிகளிலும் ரன்களை குவிப்போம் என்பதில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. நான் 24 வயதிலேயே எனது ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்காதபட்சத்தில், 40 வயதில் மட்டும் எப்படி என்னால் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.
நான் முழு உடற்தகுதியுடன் இல்லை என்று யாரும் என்னை கைக்காட்டி கூறமுடியாது என்பதே எனது பலம். இளம் வீரர்களுடன் போட்டிபோடவே நான் விரும்புகிறேன். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதே எனக்கு பெரும் சவால்" என்றார்.
மேலும், "கடந்த ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாத அழுத்தத்தில் இருந்த சென்னை பந்துவீச்சாளர்கள், தற்போது வான்கடே ஆடுகளத்தில் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்" என்றும் தோனி தெரிவித்தார்.
இதையும் படிங்க: IPL 2021 DC vs MI: மும்பையை பழித்தீர்க்குமா ரிஷப் தலைமையிலான டெல்லி?