ETV Bharat / sports

GT vs DC: வாழ்வா? சாவா? நிலையில் டெல்லி.. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா? - பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புள்ளதா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா? வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கும் அந்த அணி மீண்டு வர வாய்ப்புள்ளதா? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Today IPL Match
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 2, 2023, 6:30 AM IST

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அணிகளுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (மே 2) நடைபெறும் 44வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மிரட்டும் குஜராத்: நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது குஜராத் அணி. சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், திவாட்டியா என, குஜராத் அணியின் பேட்டிங் பட்டாளம் மிரட்டுகிறது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 333 ரன்களை குவித்துள்ளார். சில ஆட்டங்களில் தொடக்க வீரர்கள் தடுமாறினாலும், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.

கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்களை விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு டேவிட் மில்லர் நல்ல பார்ட்னர் ஷிப் கொடுத்தார். பந்துவீச்சிலும் குஜராத் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. முகமது ஷமி, ரஷீத் கான், நூர் அகமது எதிரணி பேட்ஸ்மேன்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். மொத்தத்தில் அந்த அணி வலுவாக உள்ளது.

தாக்குப்பிடிக்குமா டெல்லி?: புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி, பலம் வாய்ந்த குஜராத் அணியை சமாளிக்குமா என்பது கேள்விக்குறிதான். அதுவும் சொந்த மண்ணில் களம் இறங்கும் குஜராத் அணியை எதிர்ப்பது பெரும் சிரமமே. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டியில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

ப்ரித்விஷா, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதே டெல்லி அணியின் பின்னடைவுக்கு காரணம். மேலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுப்பதும் அந்த அணியின் மைனஸ். பேட்டிங்கில் கேப்டன் வார்னரை மட்டும் நம்பி களம் இறங்க முடியாது. மற்ற வீரர்களின் பங்களிப்பும் அவசியம். தற்போதைக்கு பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ் நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர்.

Any chance of a play-off round?
பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புள்ளதா?

பிளே ஆஃப் செல்ல முடியுமா?: டெல்லி அணி தற்போதும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் தான் நீடிக்கிறது. ஆனால் இனி வரும் 6 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். அப்படியே வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் 4ம் இடத்துக்கு செல்ல இந்த புள்ளிகள் போதுமானதா என்றால், இல்லை.

கடந்த சீசன்... : பொதுவாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒரு அணிக்கு 16 புள்ளிகள் தேவை. கடந்த (2022) சீசனை சற்று திரும்பிப் பார்ப்போம். கடந்த ஐபிஎல் தொடரில் 16 புள்ளிகளை பெற்ற பெங்களூரு அணி, 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 14 புள்ளிகளை பெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. கடந்த சீசனில் டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. ஒருவேளை அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். ஏனென்றால், பெங்களூரு அணியை விட, டெல்லி அணி நல்ல ரன் ரேட்டை பெற்றிருந்தது.

ஆட்டம் எங்கே?: டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

குஜராத் உத்தேச அணி: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், அபிநவ் மனோகர், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஸ்வா லிட்டில்.

டெல்லி உத்தேச அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.