டெல்லி: ஐபிஎல் சீசனில் 8 அணிகள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் களம்காண உள்ளன. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமமும், அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனமும் பெரும் தொகைக்கு வாங்கியது.
இந்த அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்க கடும்போட்டி நிலவ வாய்ப்புள்ளது. வரும் சீசனுக்கான மெகா ஏலம் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் நடக்க உள்ளது.
இந்த நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். கௌதம் கம்பீர் இந்தியாவுக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தவர்.
இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா