டெல்லி: உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடருக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் 2023ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் மே 28 வரை நடைபெற உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் களம் காண உள்ளன.
இதற்கான வீரர்கள் ஏலம் முன்னதாக மெகா ஏலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் மினி ஏலமாக நடத்தப்படுகிறது. இந்த மினி ஏலம் இன்று (டிச.23) மதியம் 2.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 991 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 405 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அணிகளுக்கு 87 இடங்கள் மட்டுமே உள்ளன. மொத்தம் ரூ.183.15 கோடி வரை செலவழிக்க முடியும்.
முன்னணியில் உள்ள வீரர்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.42.25 கோடி மற்றும் 17 இடங்களை நிரப்ப ஏலத்தில் நுழையும். அதேநேரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.8.75 கோடி மற்றும் 9 இடங்களை நிரப்ப உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.7.05 கோடியை வைத்திருப்பதால், இன்னும் 14 இடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த முறை ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மயங்க் அகர்வால், சாம் கரண், சிக்கந்தர் ராசா, ஜோடான் ஆகிய வீரர்கள் அதிக ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்-ரவுண்டர்களான சாம் குர்ரான, பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஒடியன் ஸ்மித், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் மற்றும் நமீபியாவின் டேவிட் வைஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகிய வீரர்கள் முன்னணி இடத்தில் உள்ளனர்.
இவர்களை பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவை தங்கள் அணிகளுக்கு சமநிலையை வழங்க ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரைத் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ வைத்துள்ள செக்:
பிசிசிஐ டை-பிரேக்கர் முறையை இந்த ஆண்டு ஏலத்தில் வைத்துள்ளது. இதில் முதலாவதாக, திறந்த ஏலத்தில் சமீபத்திய ஏலத்தின் தொகையில் வீரர் விற்கப்பட்டதாகக் கருதப்படுவார். ஏற்கனவே அடைந்த தொகைக்கு மேல் மற்றும் அதற்கு மேல் பிளேயருக்கான எழுத்துப்பூர்வ ஏலங்களைச் சமர்ப்பிக்க அணிகள் அழைக்கப்படும்.
இந்த ஏலத்தின் வருமானம் நேரடியாக பிசிசிஐக்கு சென்றுவிடாமல், அந்த வீரரால் கையொப்பமிட்டு பெற முடியும். மேலும் ஏலத்தில் பங்கேற்றுள்ள அணிகளின் நிர்வாகிகள் ஏலத்தின்போது கேப்டன்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசித்துக் கொள்ளாலாம் எனவும் பிசிசிஐ முதல்முறையாக அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா - இருக்கை ஒதுக்காததால் கடுப்பான அணியின் முன்னாள் பயிற்சியாளர்!