ETV Bharat / sports

பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி - IPL 2022 DC beat PBKS

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணி வெற்றி
டெல்லி அணி வெற்றி
author img

By

Published : May 17, 2022, 7:06 AM IST

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (மே.16) மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். பின்னர் சர்பராஸ் கான், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடினர்.

அணியின் எண்ணிக்கை 51 ஆக இருந்தபோது சர்பராஸ் கான் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 63 ரன்னில் வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டையும், ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களும், ஷிகர் தவான் 19 ரன்களும் அடித்தனர். பானுகா ராஜபக்சே 4 ரன்னுடன், லிவிங்ஸ்டோன் 3 ரன்களுடன் வெளியேறினர்.

கேப்டன் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். ஜிதேஷ் சர்மா 44 ரன்கள் எடுத்தார். ராகுல் சாஹர் 25 ரன்கள் அடித்து களத்தி இருந்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும், அக்சர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: மீண்டும் மகளிர் மினி ஐபிஎல் - களத்தில் மந்தனா, ஹர்மன்பீரித் கவுர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.