ETV Bharat / sports

ஜீரோ டூ ஹீரோ: ஐபிஎல் 2020இல் ஸ்பார்க் அதிகமாக தென்பட்ட இளம் வீரர்கள்! - ஐபிஎல் 2020 நேரலை

இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? எனக் கேள்வியுடன் சுற்றிய ரசிகர்களுக்கு, ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலேயே சிறந்த தொடர் இதுதான் எனப் பதிலளித்துள்ளது ஐபிஎல் 2020.

zero-to-hero-youngsters-that-showed-spark-in-ipl-2020

author img

By

Published : Nov 3, 2020, 6:10 PM IST

Updated : Nov 3, 2020, 6:20 PM IST

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வீரர்கள், பேட்ஸ்மேன்கள் என நட்சத்திரங்கள் உருவாகிய நிலையில், முதல்முறையாக அதிகமாக பந்துவீச்சாளர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். ஹைதராபாத் அணிக்காக நடராஜன், கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தி, பஞ்சாபுக்காக ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஆர்சிபி அணிக்காக பேட்ஸ்மேன் படிக்கல், சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணிக்காக ஆல் ரவுண்டர் ராகுல் டிவாட்டியா எனப் பலரும் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

ஐபிஎல் 2020 மூலம் கிடைத்த சிறந்த இளம் வீரர்கள்:

தேவ்தத் படிக்கல்:

20 வயதாகும் தேவ்தத் படிக்கல் மீதான எதிர்பார்ப்பு இந்த ஆண்டு ஏலத்தின்போதே அதிகமாக இருந்தது. ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு களமிறங்கிய இவர், இந்த ஆண்டில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். 14 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 472 ரன்களைக் குவித்துள்ளார். இவரைப் பற்றி முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், ''ஐபிஎல் ப்ரஷரை மிக எளிதாக கையாண்டுள்ளார் படிக்கல். இவர் தொடர்ந்து தீவிரமாக ஃபிட்னஸில் முன்னேறினால், நிச்சயம் இந்திய அணியில் விரைவாக இடம்பிடிப்பார்'' எனப் பாராட்டினார்.

தேவ்தத் படிக்கல்
தேவ்தத் படிக்கல்

ஆர்சிபி அணியில் ராகுல் விட்டுச்சென்ற இடத்தை இந்த ஆண்டு படிக்கல் சிறப்பாக நிரம்பியுள்ளார் என்பதால் ஆர்சிபி ரசிகர்கள் செம்ம ஹேப்பி.

ராகுல் டிவாட்டியா:

இந்த ஐபிஎல் தொடர் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு ராகுல் டிவாட்டியாபோல் ஆச்சரியமளிப்பதாக இருக்க வேண்டும் எனப் பதிவிட்டது.

ஆனால் தொடரின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்தான் அந்த அணிக்கு கிடைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் அனைவருக்கும் ஆச்சரியமளித்த வீரர் என்றால் நிச்சயம் ராகுல் டிவாட்டியாதான். ஏனென்றால் பஞ்சாப் அணிக்கு எதிராக எங்கேயோ இருந்த ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றிவிட்டார். இந்த சீசனில் 255 ரன்கள் குவித்ததோடு, 10 விக்கெட்டுகளும் எடுத்து ஆல் ரவுண்டராக ஜொலித்துள்ளார் ராகுல்.

ராகுல் டிவாட்டியா
ராகுல் டிவாட்டியா

ரவி பிஷ்னோய்:

யு-19 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கியவர் ரவி பிஷ்னோய். லெக் ஸ்பின்னராக இவர், 14 ஆட்டங்களில் ஆடி, 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வார்னர், பேர்ஸ்டோவ், பண்ட், ஃபின்ச், மோர்கன் என சர்வதேச பேட்ஸ்மேன்களை தனது குரு கும்ப்ளே பயிற்சியின் மூலம் வீழ்த்தியுள்ளார். ப்ளிப்பர், டாப் ஸ்பின், கூக்ளி எனப் பல வெரைட்டியான பந்துகளைத் தன்னகத்தில் வைத்துள்ள இளம் வீரர் ரவி, இந்த சீசனின் சைனிங் ஸ்டார்.

ரவி பிஷ்னோய்
ரவி பிஷ்னோய்

ஜேபி நடராஜன்:

பாகிஸ்தானில் தெருவுக்குத் தெரு கிடைக்கும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் அத்திபூத்தாற்போல் அவ்வப்போதுதான் கிடைப்பார்கள். அப்படி கிடைத்தாலும், 140 கிமீ வேகத்தில் துல்லியமாக யார்க்கர் போடுவார்களா என்பது கேள்வியே. ஆனால் தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த நடராஜனுக்கு இன்று ஆஸி. ஜாம்பவான் பிரெட் லீயும் ஃபேன்.

ஜேபி நடராஜன்
ஜேபி நடராஜன்

ஹைதராபாத் அணியின் முக்கியப் பந்துவீச்சாளர் புவி காயம் காரணமாக சென்றாலும், டெத் ஓவர்களில் யார்க்கர் வீசி எதிரணியை ஒற்றை ஆளாக அசரடிக்கிறார். தோனியின் விக்கெட்டை வீழ்த்தி தன் கனவை நிறைவேற்றிய நடராஜனுக்கு, இந்திய அணியின் நெட் பவுலராக ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பல பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக கிடைப்பார்கள். ஆனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் என்று ஜாகீருக்குப் பின் யாரும் கிடைக்கவில்லை. அந்தக் கனவை நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் மாற்றியுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்:

தொடர்ந்து 10 சீசன்களாக ப்ளே ஆஃப் சென்ற சென்னை அணிக்கு இந்த ஆண்டு சரியாக அமையவில்லை. ஆனால் இந்த சீசனில் சென்னை அணிக்கு நடந்த ஒரே நல்ல விஷயம், ருதுராஜ் கெய்க்வாட் மட்டும்தான். சென்னை அணிக்காக 6 போட்டிகளில் ஆடிய கெய்க்வாட் 204 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அடித்த இவரால், சென்னை அணிக்கு இன்னும் பல சீசன்களுக்கு ஓப்பனர்கள் தேவையில்லை. அடுத்த சீசனில் சென்னை அணிக்காக இன்னும் அதிகமாக ஜொலிப்பார் என்பது நிச்சயம்.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

வருண் சக்கரவர்த்தி:

சென்னையைச் சேர்ந்த ஆர்க்கிடெக்ட் வருண் சக்கரவர்த்தி. ஒரே ஐபிஎல் தொடர் மூலம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இவரை ஆஃப் ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர் என்ற கோட்பாட்டுக்குள் அடைக்காமல் மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்றே அழைக்கலாம். 13 போட்டிகளில் கொல்கத்தாவுக்காக ஆடிய வருண், 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நரைனால் சில போட்டிகளில் பங்கேற்க முடியாதபோது, தனி ஆளாக சக்கரவர்த்தி ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் கொண்டுவந்தார். இந்த மிஸ்ட்ரி ஸ்பின்னரின் வேலை ஆஸி. தொடரிலும் தொடர்ந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவிலும் இந்திய கொடிப் பறக்கும்.

வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி

அர்ஷ்தீப் சிங்:

இவரைப் பற்றி பல ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பஞ்சாப் அணியின் அபார கம் பேக்கிற்கு இவரும் முக்கியக் காரணம். சிறப்பாக பந்துவீசிய ஷமிக்கு, துணைக்கு ஆளில்லாமல் கஷ்டப்படும்போது இளம் விரர் அர்ஷ்தீப் சிங் களம் புகுந்து அனைவரையும் வியக்கவைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக டிஃபெண்ட் செய்வதில் சிறந்த அணியான ஹைதராபாத் அணியிடமே டிஃபெண்ட் செய்து பஞ்சாப் அணி வென்ற போட்டி ஒன்று போதும், அர்ஷ்தீப்பின் திறமையைப் பற்றி கூறுவதற்கு.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

இதையும் படிங்க: புள்ளிகள், ரன் ரேட் இரண்டிலும் ஒரே நிலையில் இருந்தால், எப்ப்டி ப்ளே ஆஃப் தேர்வு நடக்கும்?

Last Updated : Nov 3, 2020, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.