கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்திக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடரைப் போன்றே இந்தியாவில் நடைபெறும் மகளிருக்கான வுமன்ஸ் டி20 சேலஞ்ச் (Women's T20 Challenge) தொடருக்கான இடம், தேதி, அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டுக்கான வுமன்ஸ் டி20 சேலஞ்ச் போட்டிகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மேலும் இந்த சீசனுக்கான போட்டிகள் அனைத்து சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
சூப்பர்நோவாஸ், டிரையல்பிளேஸர்ஸ், வெலாசிட்டி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர்.
-
The BCCI announces squads for Women’s T20 Challenge.@ImHarmanpreet, @mandhana_smriti & @M_Raj03 to lead Supernovas, Trailblazers & Velocity respectively. The upcoming Women’s T20 Challenge will be played from 4th to 9th November in UAE.
— BCCI (@BCCI) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details - https://t.co/XpHsvmoEjl pic.twitter.com/Y04VxlGRnz
">The BCCI announces squads for Women’s T20 Challenge.@ImHarmanpreet, @mandhana_smriti & @M_Raj03 to lead Supernovas, Trailblazers & Velocity respectively. The upcoming Women’s T20 Challenge will be played from 4th to 9th November in UAE.
— BCCI (@BCCI) October 11, 2020
More details - https://t.co/XpHsvmoEjl pic.twitter.com/Y04VxlGRnzThe BCCI announces squads for Women’s T20 Challenge.@ImHarmanpreet, @mandhana_smriti & @M_Raj03 to lead Supernovas, Trailblazers & Velocity respectively. The upcoming Women’s T20 Challenge will be played from 4th to 9th November in UAE.
— BCCI (@BCCI) October 11, 2020
More details - https://t.co/XpHsvmoEjl pic.twitter.com/Y04VxlGRnz
அதேசமயம் நவ.04 ஆம் தேதி நடைபெறவுள்ள சீசனின் தொடக்கப் போட்டியில் நடப்பு சம்பியன் சூப்பர்நோவாஸ் அணி, வெலாசிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
வுமன்ஸ் டி20 சேலஞ்சில் பங்கேற்கும் அணிகள்:
சூப்பர்நோவாஸ்: ஹர்மன்பிரித் கவுர்(கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், சாமாரி அடபட்டு, பிரியா புனியா, அனுஜா படில், ராதா யாதவ், தனியா பாட்டியா, சஷிகலா ஸ்ரீவர்தனே, பூனம் யாதவ், ஷகிரா செல்மன், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்டரகர், ஆயுஷி சோனி, அயபோங்கா காக்கா, முஸ்கன் மாலிக்.
டிரையல்பிளேஸர்ஸ்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா, புனம் ரவுத், ரிச்சா கோஷ், டி ஹேமலதா, நுஜாத் பர்வீன், ராஜேஸ்வரி கயக்வாட், ஹார்லீன் தியோல், ஜுலான் கோஸ்வாமி, சிம்ரான் தில் பகதூர், சல்மா கட்டூன், சோஃபி எக்லெஸ்டோன், நத்தகன் சாந்தம், தியான்ட்ரா டோட்டின், கஷ்வீ கவுதம்.
வெலாசிட்டி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, வேத கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, ஏக்தா பிஷ்ட், மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தேவிகா வைத்யா, சுஷ்ரீ திபியதர்ஷினி, மணாலி தக்ஷினி, லே காஸ்பெரெக், டேனியல் வியாட், சுனே லூஸ், ஜஹனாரா ஆலம், அனகா.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் மூன்றாவது காஷ்மீர் வீரர்!