ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி பும்ரா, போல்ட் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் - டி காக் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. சிறப்பாக விளையாடிவந்த டி காக் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இஷான் கிஷன் அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் 14.2 ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 72 ரன்களை எடுத்தார்.
இதையும் படிங்க:லா லிகா: ஈபார் எஃப்சியை வீழ்த்தியது காடிஸ் எஃப்சி!