ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டீ-காக் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யாகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். 4ஆவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷானும் 7 ரன்களில் அவுட்டானார்.
டீ-காக் நிதானமாக விளையாடி 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதி ஓவர்களில் பொல்லார்டு மற்றுர் குல்டர் நைல் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் ரன்டேட்டை உயர்த்தினர்.
பொல்லார்டு 12 பந்துகளில் 4 சிக்சர், 1 பவுண்டரி என 34 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி மற்றும் ஆர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 11 ரன்னில் பும்ரா பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கெயல், பூரான் இருவரும் 24 ரன்களில் அவுட்டாகினர்.
ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி வெளியேறியதால், பஞ்சாப் அணி இலக்கை எட்ட தடுமாறியது. ஆனால் கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவின் யாக்கரில் அவுட்டானார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் பஞ்சாப் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணி வெற்றி கண்டது. சூப்பர் ஓவரில் மும்பை அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி 15 அடித்து வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது.