ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற மிகக் குறைந்த அளவிலான வாய்ப்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது. இந்நிலையில், அந்த அணியின் அனுபவமிக்க ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காணொலி வெளியிட்டுள்ள டுவைன் பிராவோ, "இது சோகமான செய்தி, எனது சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுவது வருத்தமளிக்கிறது. நீங்கள் அனைவரும் அணியை ஊக்குவித்து, தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். அனைத்து உண்மையான சிஎஸ்கே ரசிகர்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் மூன்று ஐபிஎல்களை வென்ற சிஎஸ்கேவின் சிறந்த சாதனையை பிராவோ ரசிகர்களுக்கு நினைவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது நாங்களோ, ரசிகர்களோ எதிர்பார்த்து விரும்பிய சீசனாக அமையவில்லை. ஆனால் நாங்கள் சிறந்த முறையில் எங்களது முழு பங்களிப்பையும் வழங்கினோம். சில நேரங்களில் முயற்சித்தபோதிலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை.
எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும், நாங்கள் சாம்பியன்களைப் போல வலுவாகவும் சிறப்பாகவும் வருவோம் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கேவின் ரசிகர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருக்க நாம் பெருமைப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
இந்த சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ ஆறு விக்கெட்டுகளைப் கைப்பற்றியுள்ளார். இருப்பினும், இரண்டு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார். நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஏழு தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
Champion's message to the Super Fans as he bids adieu. Take care DJ! @DJBravo47 #Yellove 🦁💛 pic.twitter.com/pHFnkHLQzq
— Chennai Super Kings (@ChennaiIPL) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Champion's message to the Super Fans as he bids adieu. Take care DJ! @DJBravo47 #Yellove 🦁💛 pic.twitter.com/pHFnkHLQzq
— Chennai Super Kings (@ChennaiIPL) October 21, 2020Champion's message to the Super Fans as he bids adieu. Take care DJ! @DJBravo47 #Yellove 🦁💛 pic.twitter.com/pHFnkHLQzq
— Chennai Super Kings (@ChennaiIPL) October 21, 2020
மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பலம் இழந்த நிலையில் உள்ளது. இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தொடர் தொடங்குவதற்கு முன்பே அணியிலிருந்து வெளியேறினர். கேப்டன் தோனி, கேதார் ஜாதவ் போன்ற சில மூத்த வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் ரசிகர்கள் சிஸ்கே அணியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.