ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், இந்த சீசனின் பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்வி நீடித்து வந்தது.
நியூலாந்திலுள்ள அவரது பெற்றோர் இறந்ததினால், இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அவர் முற்றிலுமாக விலகுவார் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ஸ்டோக்ஸ், இன்று (அக்.03) இரவு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தடைவார் என்றும் ஐபிஎல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் இங்கு வந்ததும், அவர் உடனடியாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு கரோனா கண்டறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டை மேம்படுத்த வார்னேவின் ஐடியா!