ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமின்றி ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சிஸ்கே அணி, கேகேஆர் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் கேகேஆர் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி, இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது. போட்டி முடிவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தோனி, அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இது குறித்து பேசிய தோனி, “இன்னிங்ஸின் தொடக்கம் எங்களுக்குச் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் இடைப்பட்ட ஓவர்களில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மேலும் இறுதி ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்காமல் விட்டதே எங்களின் தோல்விக்கு முக்கியக் காரணம்.
இந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியை 160 ரன்களில் சுருட்டினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை வழங்கவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம்” என்று தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றியையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சிஎஸ்கேவை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!