ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் தவான், பிரித்வி ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களிலும், ரிஷப் பந்த் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களை தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெட்மையர், ஹர்சல் படேல் ஆகியோரும் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையும் படிங்க:சதத்தை தவறவிட்ட விரக்தி: பேட்டை தூக்கி எறிந்த கெயிலுக்கு அபராதம்!