ஐபிஎல் தொடரில் இன்று (அக்.21) நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கத்திலேயே மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தார் முகமது சிராஜ்.
அணியின் நட்சத்திர வீரர்கள் திரிபாதி, பான்டன், ராணா என அனைவரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி அசத்தினார். மேலும், தினேஷ் கார்த்திக், சுப்மன் கில், கம்மின்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் கேகேஆர் அணி 50 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது. பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இயன் மோர்கன் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி சார்பில் முகமது சிராஜ் 8 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:புகைப்படத்தால் இணையத்தை கலக்கிய வங்., வீராங்கனை!