ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (அக்.15) நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. நடப்பு ஐபிஎல் சீசனின் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.
இனி வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வாமை காரணமாக, இந்த சீசனில் களமிறங்காமல் இருந்த பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், ஆர்சிபி அணிகெதிரான நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளதாக, அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
🗣 @henrygayle's special message for you fans 😍
— Kings XI Punjab (@lionsdenkxip) October 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
How does it feel? 👇🏻#SaddaPunjab #IPL2020 #KXIP pic.twitter.com/HcZ6QlV4B6
">🗣 @henrygayle's special message for you fans 😍
— Kings XI Punjab (@lionsdenkxip) October 13, 2020
How does it feel? 👇🏻#SaddaPunjab #IPL2020 #KXIP pic.twitter.com/HcZ6QlV4B6🗣 @henrygayle's special message for you fans 😍
— Kings XI Punjab (@lionsdenkxip) October 13, 2020
How does it feel? 👇🏻#SaddaPunjab #IPL2020 #KXIP pic.twitter.com/HcZ6QlV4B6
இதுகுறித்து கெய்லின் காணொலி பதிவில், “ரசிகர்களின் காத்திருப்பு முடிந்துவிட்டது. யுனிவர்ஸ் பாஸ் மீண்டும் வந்துவிட்டார். ரசிகர்கள் இவ்வளவு காலமாக காத்திருந்தது எனக்கு தெரியும். அவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் தற்போது புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளோம்.
ஆனாலும் எங்களது நம்பிக்கை குறையவில்லை. இன்னும் ஏழு போட்டிகள் உள்ளன. அதனால் நிச்சயம் எங்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு சதம், 28 அரை சதங்களுடன் 4,484 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டென்மார்க் ஓபன் : இரண்டாம் சுற்றில் ஸ்ரீகாந்த்!