ETV Bharat / sports

ஐபிஎல் 2020: கேகேஆர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த புர்ஜ் கலிஃபா! - புர்ஜ் கலிஃபா

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அந்த அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய எல்.இ.டி விளக்குகளால் கட்டடம் ஒளிர செய்யப்பட்டது.

IPL 13: Burj Khalifa wishes KKR ahead on their season opener

author img

By

Published : Sep 23, 2020, 6:14 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

துபாய்: உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அந்த அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய எல்.இ.டி விளக்குகளால் கட்டடம் ஒளிர செய்யப்பட்டது.

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் நேற்றிரவு (செப்.22) உலகின் மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் புர்ஜ் கலிஃபா கட்டடத்தில், கொல்கத்தா அணியினரை கவுரவிக்கும் விதமாக அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் எல்.இ.டி விளக்குகளால் ஒளிர செய்தனர்.

இதுதொடர்பான இக்காணொலியை கேகேஆர் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அப்பதிவில், ‘இந்த வண்ணமயமான வரவேற்புக்கு நன்றி, 'புர்ஜ் கலிஃபா’ என பதிவிட்டு, எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காணொலியையும் இணைத்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: சிஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.