ஐபிஎல் தொடரி முடிவடைந்த பின் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரோஹித் தேர்வு செய்யப்படாததற்கு காயம் காரணமாக கூறப்பட்டாலும், ஃபிட்னெஸ்ஸும் முக்கியக் காரணமாக ரசிகர்களிடையே கருத்து எழுந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் ரோஹித் காயத்திலிருந்து முழுமையாக குணமானதும் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், '' ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா நிச்சயம் இடம்பெறுவார். டெஸ்ட் தொடரில் கட்டாயம் ஆடுவார். ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோஹித் அணியோடு இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது'' என்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி நவ.27ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில் முதலில் ஆடுகிறது. அதன்பின் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு யார் தகுதிபெறுவார்கள் என்பதை நிர்ணயிக்கும் தொடராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யார்க்கர் நடராஜன்தான் இந்த ஐபிஎல்-ன் கண்டுபிடிப்பு: டேவிட் வார்னர்