ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்!

சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

chennai-super-kings-won-the-toss-and-opt-to-bat

author img

By

Published : Oct 19, 2020, 7:03 PM IST

Updated : Oct 19, 2020, 7:11 PM IST

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (அக்.19) நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இரு அணிகளாலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சாம் கர்ரன், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஜோஷ் ஹசில்வுட், ஷர்துல் தாக்கூர்.

ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புட்.

இதையும் படிங்க: வரலாற்றை தக்கவைக்குமா சிஎஸ்கே?

Last Updated : Oct 19, 2020, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.