ETV Bharat / sports

'சாம் கரண்'னால் தப்பிய சிஎஸ்கே... மும்பை அணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயம்! - coulter nile

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் ஆடிய சென்னை அணி 115 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

IPl 13 - CSK vs MI innings break
IPl 13 - CSK vs MI innings break
author img

By

Published : Oct 23, 2020, 9:22 PM IST

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணி கெய்க்வாட் - டூ ப்ளஸிஸ் இணை களமிறங்கியது.

ஆட்டத்தில் தொடக்கத்திலேயே மும்பை அணியின் போல்ட் - பும்ரா இணை சென்னை அணியின் பேட்டிங்கை முழுவதுமாக உடைத்தது. கெய்க்வாட், ஜெகதீசன் ஆகியோர் ரன் எடுக்காமலும், ராயுடு 2 ரன்னிலும், டூ ப்ளஸிஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்திய போல்ட்
கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்திய போல்ட்

பின்னர் வந்த ஜடேஜா 7 ரன்னில் ஆட்டமிழக்க, பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 24 ரன்களுக்கு 45 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அடுத்த ஓவரிலேயே கேப்டன் தோனி 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தீபக் சாஹர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் பறிபோனது.

பும்ரா
பும்ரா

ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணியின் ஸ்கோரை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாம் கரணின் பொறுப்பான ஆட்டத்தில் 60 ரன்களைக் கடந்தது.

பின்னர் வந்த தாகூர் 20 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து ஆடிய வந்த தாஹீருடன் ஜோடி சேர்ந்த சாம் கரண் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனாலும் ரன்கள் உயர்வது குதிரை கொம்பாக இருந்தது.

அரைசதம் அடித்த சாம்
அரைசதம் அடித்த சாம்

கடைசி மூன்று ஓவர்களில் சாம் கரண் - தாஹிர் இணை அதிரடியாக 32 ரன்கள் சேர்க்க, சென்னை அணி 115 ரன்களை இலக்காக மும்பை அணிக்கு நிர்ணயித்தது. கடைசி வரை போராடிய இளம் வீரர் சாம் கரண் 52 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: கபில் தேவ் விரைந்து குணமடைய வாழ்த்தும் கிரிக்கெட் உலகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.