ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், இளம் வீரர்கள் கொண்ட டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி பவுலிங், பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தியதால், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்றைய போட்டிக்கு பின் இந்திய அணி மட்டுமல்லாது சென்னை அணிக்கும் ஒரு ஃபெர்பெக்ட் பினிஷ்ராக இருந்து வரும் தோனியிடம், இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் ஆலோசனைகள் பெற்றார். அதைத் தொடர்ந்து பந்த் தோனியின் மகள் ஸிவாவிடம் சிறிது நேரம் விளையாடி பொழுதைக் கழித்தார்.
அப்போது நான்கு வயதே ஆன ஸிவா, ரிஷப் பந்திற்கு அ, ஆ, இ, ஈ... என தமிழில் பாடம் எடுத்தார். இந்த வீடியோ ஸிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியை போன்றே அவரது மகளும் சுட்டித்தனத்தில் ஈடுபட்டு சமீபகாலமாக நெட்டீசன்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.