12ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. நேற்றைய போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதின. அதில், டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
இதனையடுத்து, தோல்விக்கு பின் மும்பை அணி வீரர் யுவராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, ரிஷப் பந்த் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக தெரிவித்தார். அவர் 360 டிகிரியிலும் பந்தை பறக்கவிடும் திறமையை பார்க்கையில், ரிஷப் பந்த்-ஐநிச்சயம் பாதுகாத்து சரியாக வழிநடத்த வேண்டும்.எதிர்காலத்தில் இந்திய அணிக்காக பல முக்கிய வெற்றிகளை பெற்றுத்தரக் கூடிய வீரர் எனப்புகழாரம் சூட்டினார்.
நான் சிறப்பாக ஆடியதற்கு, சச்சினின் ஆலோசனைகளே காரணம். அடுத்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த் ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். 20 அல்லது 30 ரன்கள் குறைவாகக் கொடுத்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும் என யுவராஜ் சிங் கூறினார்.
நேற்றையப் போட்டியில், யுவராஜ் சிங் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்தப் போட்டியின் ஸ்டைலிஷ்ப்ளேயர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.