ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் வாழ்நாள் முழுவதும் ஆர்.சி.பி அணிக்காக ஆட வேண்டும்: சாஹல்! - ஐபிஎல் 2019

டெல்லி: எனது வாழ்நாள் முழுவதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என பெங்களூரு வீரர் சாஹல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சாஹல்
author img

By

Published : Apr 23, 2019, 12:58 PM IST

12ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வீரர் சாஹல் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் சாஹல், விராட் கோலிக்கு விருப்பமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சாஹல், "ஆர்.சி.பி அணியை எப்பொதும் குடும்பமாகவே பார்க்கிறேன். 2014ஆம் ஆண்டு முதல் இந்த அணியில் விளையாடி வரும் எனக்கு, ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். கேப்டன் விராட் கோலி தொடர்ந்து வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார்.

விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரோடு இணைந்து ஆடுவது மனதளவில் மிகப்பெரிய உறுதியை ஏற்படுத்துகிறது. சில போட்டிகளில் சொதப்பியதால் ஆர்சிபியை சிறந்த அணி அல்ல எனக் கூற முடியாது.

உலகக்கோப்பைத் தொடருக்கு சிறப்பாகத் தயாராகி வருகிறேன். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடர்களில் சிறப்பாகப் பந்துவீசினால், உலகக் கோப்பையிலும் அதனைத் தொடர முடியும் என நம்புகிறேன். எனது வாழ்நாள் முழுவதிலும் ஆர்.சி.பி அணிக்காக ஆட வேண்டும்" என நெகிழ்வுடன் பேசினார்.

நாளை சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் ஆடவுள்ளன.

Intro:Body:

https://www.aninews.in/news/sports/cricket/want-to-play-for-rcb-in-ipl-throughout-my-life-yuzvendra-chahal20190423110250/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.