பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் சென்னை வீரர்களான வாட்சன் மற்றும் தாஹீர் இருவரும் அவரது குழந்தைகளுடன் விளையாடினர். அப்போது ஜூனியர் வாட்சன் மற்றும் ஜூனியர் தாஹீர் இடையே ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது.
அப்போது இவர்களுக்கு பின்னால் இருந்த தோனி, இவர்களுடன் பின்னோக்கி ஓட, ஜூனியர்களும் தோனியுடன் ஓடினர். திடீரென பாதியில் தன் ஓட்டத்தை நிறுத்திய தோனி, ஜூனியர் தாஹீரை தூக்கிக் கொண்டு தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்தார்.
![Dhoni](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2925118_dhoni.jpg)
அவர் குறும்புத்தனமாக விளையாடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. போட்டிக்குப் பின்னர், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் குழந்தைகளுடன் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் கேப்டன் தோனி குறித்து வீடியோ வெளியாவது வாடிக்கையாகி வருகிறது.