இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிவருகிறார். ஐபிஎல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்தும் ஒவ்வொரு ஆட்டமும் முடிந்த பின்னர் திரைப்பட பஞ்ச் டயலாக்குகளை பேசி தமிழ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். அதுமட்டுமல்லாது அவரை 'புலவர்' என்று தமிழ்நாடு ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
இதேபோன்று சென்னை அணியில் விளையாடும் இம்ரான் தாஹிர், வாட்சன், பிராவோ, கேதர் ஜாதவ் ஆகியோர் தமிழில் எழுதிய வாசகங்களுடன் தமிழ் புத்தாண்டு திருநாளுக்கு வித்தியாசமான முறையில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், தமிழில் தங்களது பெயர்களை எழுதி வெளியிட்டது வலைதளத்தில் வைரலானது.
ஆனாலும் இவர்களைத் தாண்டி ஒருபடி மேலாக ஹர்பஜன்சிங் தமிழராகவே மாறிவிட்டார். இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தைக் கற்றுக்கொண்டு அவர் சிலம்பம் சுத்தும் காணொளி காட்சி வைரலாகி வருகிறது.
மற்ற வீரர்கள் ஒற்றைக் கையில் சிலம்பம் பயிற்சி எடுத்து சுற்றுவதற்கே சிரமப்பட்டனர். ஆனால் ஹர்பஜன் இரட்டைக் கையில் சிலம்பம் சுற்றி அசத்தினார்.
சும்மா இறங்கி வூடு கட்டி ஆடும்
அவரது திறமையைக் கண்டு பாராட்டிவரும் தமிழ்நாடு ரசிகர்கள் பச்சைத் தமிழனாக மாறிவிட்ட ஹர்பஜன் என கூறி வருகின்றனர்.