ETV Bharat / sports

பெங்களூரு அணியின் ப்ளே-ஆஃப் கனவை தகர்க்குமா டெல்லி? - Delhi Capitals

டெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது.

பெங்களூரு
author img

By

Published : Apr 28, 2019, 11:12 AM IST

ஐபிஎல் தொடர் உச்சபட்ச பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் முதல் போட்டியில் டெல்லி - பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி தற்போது தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று ப்ளே- ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

பெங்களூரு அணி
பெங்களூரு அணி

பெங்களூரு அணிக்கு இன்று நடைபெறவுள்ள போட்டியோடு சேர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த அணியின் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஸ்டோனிஸ், பார்திவ் படேல் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருகின்றனர். தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொயின் அலி அவரது நாடான இங்கிலாந்துக்கு திரும்பியுள்ளதால் பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெயின் காயம் காரணமாக விலகியுள்ளதால் பந்துவீச்சிலும் அந்த அணியின் பலம் குறைந்துள்ளது.

பெங்களூரு அணி
விராட் கோலி - மொயின் அலி

அதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரையில் ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், காலின் இங்ரம், ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தால் 11 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இன்றையப் போட்டியில் பெங்களுரு அணியை வீழ்த்தினால் ப்ளே-ஆஃப் சுற்று வாய்ப்பு டெல்லி அணிக்கு உறுதியாகிவிடும் என்பதால் கவனத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு அணி
தவான் - ப்ரித்வி ஷா

ரபாடாவின் பந்துவீச்சு பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கும் அணிகள் மோதுவதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களைடையே அதிகரித்துள்ளது. மேலும் இன்றையப் போட்டியில் பெங்களுரு அனி தோல்வியடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.