மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
இருப்பினும் இந்தப் போட்டியில், தல தோனி புதிய சாதனை ஓன்றை படைத்துள்ளார். ஐந்தாவது வீரராக வந்த தோனி 21 பந்துகளில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4,000 ரன்களை அடித்த எட்டாவது வீரராகவும், இரண்டாவது சென்னை வீரர் என்ற பெறுமையையும் பெற்றுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் சென்னை வீரர் ரெய்னா 5,086 ரன்களுடன் முதலிடத்திலும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 5,026 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இதனிடையே, சென்னை வீரர் பிராவோ இப்போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை பிராவோ படைத்தார்.