12ஆவது ஐபிஎல் சீசனில் டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும், ஆலோசகராக இந்திய முன்னாள் கேப்டன் கங்குலியும் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். உலகின் இரண்டு தலை சிறந்த கேப்டன்களாக திகழ்ந்த இருவரின் வழிகாட்டுதல் மூலம் டெல்லி இந்த முறை ஐபிஎல் கோப்பையை ஏந்துமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கங்குலியுடன் பணிபுரிவது குறித்து பாண்டிங் கூறுகையில், “நானும் கங்குலியும் கிரிக்கெட் குறித்து ஒரே மாதிரியான என்ணங்களை கொண்டுள்ளோம். அவருடன் செயல்படுவது சிறந்த அனுபவமாக உள்ளது.
நாங்கள் இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின்னர், வருடத்திற்கு இருமுறையேனும் சந்தித்துக் கொள்வோம். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்காக டெல்லி அணி சிறப்பாக தயாராகி வருகிறது. கொல்கத்தா மைதானம் குறித்து டெல்லி அணியின் இளம் வீரர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை சவுரவ் வழங்கி வருகிறார். முக்கியமாக இடதுகை பேட்ஸ்மேன்களான தவான், ரிஷப் பந்த், ராகுல் டிவாட்டியா ஆகியோருடன் அதிகநேரம் செல்விட்டு வருகிறார்” என்றார்.
கங்குலி மீது எக்காலத்திலும் தீராத பிரியம் கொண்ட கொல்கத்தா ரசிகர்கள், இந்த போட்டியில் டெல்லிக்கு ஆதரவளிப்பார்களா? இல்லை கொல்கத்தாவுக்கு ஆதரவளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.