ETV Bharat / sports

10ஆவது முறையாக டாஸில் தோல்வி அடைந்த விராட் கோலி! - ஐபிஎல் 2019

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

டாஸில் 10ஆவது முறையாக தோல்வி அடைந்த விராட் கோலி!
author img

By

Published : Apr 30, 2019, 9:49 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதன் மூலம், இந்த ஐபிஎல்-12வது தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 12 போட்டிகளில் கலந்து கொண்டு 10 முறையும் டாஸில் தோல்வி அடைந்துள்ளார்.

பெங்களூரு அணியில் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக பவான் நெகி, குல்வந்த் கெஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மறுமுனையில், ராஜஸ்தான் அணியில் அஷ்டன் டர்னரை அணயில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மஹிபால் லொம்ராருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி விவரம்: கோலி (கேப்டன்), பார்திவ் படேல், டி வில்லியர்ஸ், ஹென்ரிச் கிளாசன், குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பவான் நெகி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரொலியா, சாஹல்

ராஜஸ்தான் அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ரஹானே, லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, மஹிபால் லொம்ரார், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனாத்கட், வருண் ஆரோன், ஓஷேனே தாமஸ்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.