12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் -தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சற்றுமுன் தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப்அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். கடந்த போட்டியில் வெற்றிபெற்ற அதே வீரர்களுடன்கொல்கத்தா அணி இன்றைப் போட்டியில் களமிறங்கியுள்ளது.
மறுமுனையில் பஞ்சாப் அணியில் நான்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அணியில் நிகோலஸ் பூரான், சாம் கரன்,அன்கிட் ராஜ்பூட், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்துஸ் வில்ஜோயின் (Hardus Viljoen), வருண் சக்ரவர்த்தி, ஆன்ட்ரூவ் டை ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியின் மூலம், ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு விலைக்கு போன வருண் சக்ரவர்த்தி, ஹர்துஸ் வில்ஜோயின் ஆகியோர்ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.
தனக்கு கிடைத்த அணியை தினேஷ் கார்த்திக்எந்தவித அழுத்தமும் இல்லாமல் சிறப்பாக பயன்படுத்திவருகிறார். மறுமுனையில்,அஷ்வினும் இதையே செய்கிறார். ஆனால் அதில் அவருக்கு பக்குவம் இன்னும் தேவைப்படுகிறது.
மன்கட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அவர் எப்படிகேப்டன்ஷிப்பில் ஈடுபடுவார் என்ற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இதனால், இன்றையப் போட்டியில் கெயில், ரஸ்ஸல்ஆகியோரை விட அஷ்வின்தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய வீரராக இருப்பார் என தெரிகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
கொல்த்தா -15 வெற்றி, பஞ்சாப் - 8 வெற்றி
குறிப்பாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டங்கள் - 10
கொல்கத்தா - 7 வெற்றி, பஞ்சாப் - 3 இல் மட்டுமே வெற்றி
கொல்கத்தா அணி விவரம்:கிறிஸ் லின், சுனில் நரைன், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில், ராபின் உத்தப்பா, ஆன்ட்ரே ரஸ்ஸல், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, லோக்கி ஃபெர்குஷன், பிரசித் கிருஷ்ணா
பஞ்சாப் அணி விவரம்:கெயில், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், மந்தீப் சிங், அஷ்வின், டேவிட் மில்லர், ஹர்துஸ் வில்ஜோயின், முகமது ஷமி, ஆன்ட்ரூவ் டை, வருண் சக்ரவர்த்தி, அன்கிட் ராஜ்பூட்