ETV Bharat / sports

விராட் கோலி ஸ்டைலிஸ் சதம்; இமாலய இலக்கை விரட்டுமா கொல்கத்தா?

author img

By

Published : Apr 19, 2019, 11:36 PM IST

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் விராட் கோலி, மொயின் அலியின் அதிரடியான ஆட்டத்தால் 213 ரன்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.

கொல்கத்தா

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகல் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணியைப் பேட்டிங் ஆடப் பணித்தார்.

பின்னர் கேப்டன் விராட் கோலி - பார்த்திவ் படேல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே நிதானமாக ஆடிய இந்த இணை விக்கெட்டுகளை இழக்காமல் கொல்கத்தா பந்துவீச்சைக் கவனமாக எதிர்கொண்டது. பின்னர் நரைன் வீசிய பந்தில் தொடக்க வீரர் பார்த்திவ் படேல் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இளம் வீரர் அக்‌ஷ்தீப் நாத் களம் புகுந்தார்.

மொயின் அலி
மொயின் அலி

பின்னர் கோலி - அக்‌ஷ்தீப் நாத் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணையை கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்கள் பவுண்டரிகளை அடிக்கவிடாமல் சிறப்பாக பந்துவீசினர். பெங்களூரூ அணி 8.5 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்திருந்தபோது, 13 ரன்களில் அக்‌ஷ்தீப் நாத் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து மொயின் அலி களமிறங்க ஆட்டம் சூடு பிடித்தது. விராட் கோலி - மொயின் அலி இணை அதிரடியாக ரன்களை சேர்க்கத் தொடங்கியது. 14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 110 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய விராட் கோலி ஐபிஎல் தொடர்களில் தனது 37ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.

மொயின் அலி
விராட் கோலி - விராட் கோலி

தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்த இணை, குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் சிக்ஸர்களாக பறக்கவிட்டது. அந்த ஓவரில் மொயின் அலி தனது மூன்றாவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அந்த ஓவரில் 4, 6, 4, 4, 6 என மொயின் அலி அதிரடி காட்டி, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 28 பந்துகளில் 66 ரன்களை சேர்த்து பெவியியன் திரும்பினார்.

பின்னர் விராட் கோலி - ஸ்டோனிஸ் இணை ஜோடி சேர்ந்தது. ஒரு முனையில் ஸ்டோனிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலி கட்டுக்கடங்காத காளையாய் அதிரடியில் மிரட்டினார். 17ஆவது ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 18ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்க்க, 19ஆவது ஓவரில் விராட் கோலி ஸ்டைலாக ஒரு சிக்ஸரை அடிக்க, அடுத்த பந்திலே மிக நேர்த்தியான ஒரு கவர் ட்ரைவை அடித்து 90 ரன்களைத் தாண்டி சென்றார். அந்த ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது.

மொயின் அலி
விராட் கோலி - விராட் கோலி

கடைசி ஓவரில் முதல் பந்தில் ஒரு ரன் சேர்க்க, இரண்டாவது பந்தில் ஸ்ட்ரைக் வந்த ஸ்டோனிஸ் பவுண்டர் அடிக்க, மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது. நான்காவது பந்தில் மேலும் ஒரு ரன் சேர்க்க, 96 ரன்களில் இருந்த விராட் கோலிக்கு ஸ்ட்ரைக் சென்றதையடுத்து ரசிகர்கள் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் தொடரில் தனது ஐந்தாவது சதத்தைப் பதிவு செய்தார் பெங்களூரு கேப்டன் விராட் கோலி. ஆட்டத்தின் கடைசி பந்தில் விராட் கோலி ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை பெங்களூரு அணி சேர்த்தது. கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 64 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

KKR vs RCB 1st innings

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.