ETV Bharat / sports

சொந்த மண்ணில் சென்னையை சாய்க்குமா பெங்களூரு? - ஸ்டெயின்

பெங்களூரு: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது.

csk vs rcb
author img

By

Published : Apr 21, 2019, 1:27 PM IST

12ஆவது ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸியம் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 7-ல் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முடிசூடா மன்னனாக விளையாடி வருகிறது. கேப்டன் தோனி கடந்த போட்டியில் களமிறங்கவில்லை என்றாலும், இந்த போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் வழக்கம் போல் எந்த வீரர் சிறப்பாக ஆடுவார் என்பது போட்டியின்போது தான் தெரிந்துகொள்ள முடியும். கேப்டன் தோனியிடம் இருந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் வெளிப்பட வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா, சாஹர் ஆகியோர் சிறப்பாக வீசி வருகிறார்கள். இன்றும் அதனை எதிர்பார்க்கலாம்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலி, மொயின் அலி, ஸ்டோனிஸ், பார்த்திவ் படேல் ஆகியோர் ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் சென்னை அணியின் பந்துவீச்சுக்கு மிகப்பெரிய சவால் அளிப்பார்கள் என்பது நிச்சயம். கடந்த போட்டியில் களமிறங்காத டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் ஆடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. பந்துவீச்சில் சாஹலைத் தவிர மற்றவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படலாம். பெங்களூரு அணியின் பந்துவீச்சில் ஸ்டெயின் இணைந்துள்ளதால் பந்துவீச்சில் சற்று பலம் கூடியுள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக தோனியின் மறக்க முடியாத இன்னிங்ஸ் வெளிப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பெங்களூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் மிகப்பெரிய ஸ்கோர் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் சென்னை அணியிடம் பெற்றத் தோல்விக்கு பெங்களூரு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருஅணியினருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

csk vs rcb

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.