12ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், இன்று ஐபிஎல் ஃபைனலுக்கான டிக்கெட்டுகள் இன்று தொடங்கிய நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் இரண்டு நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.