சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிருக்கு ரசிகர்கள் வைத்த பட்டப் பெயர் பராசக்தி எக்ஸ்பிரஸ். ஒவ்வொரு முறையும் இவர் விக்கெட்டை வீழ்த்திய பின், மைதாதனத்தை சுற்றி ஓடிக் கொண்டிருப்பார். அதனால் ரசிகர்கள் இவரை வைத்து ஏராளமான மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.
நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் இவர் தனது ஓட்டத்தை நிறுத்தவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் இம்ரான் தாஹிர். 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பலனாக, இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின், தான் ஏன் மைதானத்தை சுற்றி ஓடுகிறேன் என்பது குறித்து அவர் கூறுகையில்,
தோனி வழங்கிய அறிவுரைப்படியே பந்துவீசினேன். அதன் பலனாகதான் எனக்கு விக்கெட்டுகள் வீழ்ந்தது என்றார். மேலும், கிரிக்கெட் மீது எனக்கு எண்ணற்ற ஆர்வம் உள்ளது. இதனால், விக்கெட்டை கைப்பற்றியப் பின் அதை கொண்டாடும் விதமாகவே நான் மைதானத்தை சுற்றி ஓடுவருகிறேன்.
சென்னை அணிக்கு விளையாடுவதை நான் எப்போதும் பெருமையாக நினைக்கிறேன். சென்னை அணி தலைசிறந்த அணிகளில் ஒன்று. அந்த அணியின் மீது எனக்கு இருக்கும் மரியாதை மற்றும் அன்பு எப்போதும் என் மனதில் நிலைத்திருக்கும், என தெரிவித்தார்.