2017ஆம் ஆண்டு ப்ரிஸ்டோலில், நள்ளிரவு விடுதியின் வெளியே ஒருவருடன் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சண்டையில் ஈடுபட்டார். இதனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சரித்திர புகழ்மிக்க ஆஸஸ் டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள பென் ஸ்டோக்ஸ், “ப்ரிஸ்டோல் சம்பவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. என் வாழ்வில் ஏற்பட்ட சிறந்த சம்வங்களில் அதுவும் ஒன்று. ஏனென்றால் அச்சம்பவத்திற்கு பின், என்னை நான் மிகவும் மாற்றிக்கொண்டேன். என்ன நடந்தாலும், அந்த சம்பவம் என் வாழ்வில் எப்போதும் ஒரு அங்கமாகவே இருக்கும். அதேபோல், நான் மைதானத்தில் எவ்வாறு செயல்படுகிறேன் என மக்கள் நினைவு கூற வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.