2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் பிராடு வீசிய ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு சாதனைப் படைத்தார் யுவராஜ் சிங். அதேபோல் நேற்று நடைபெற்ற மும்பை - பெங்களூரு அணிகள் மோதியப் போட்டியில், சாஹல் வீசிய ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டு நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறுவார் யுவராஜ் சிங்.
இதனை ஸ்டுவர்ட் பிராடு பந்தில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை அடித்ததை நியாபகப்படுத்தியதாக ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், போட்டிக்கு பின்னர் செய்தியாளர்க்ளை சந்தித்த சாஹல், 'எனது பந்தில் யுவராஜ் சிங் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்தபோது இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராடை போல் உணர்ந்தேன்' என தெரிவித்துள்ளார்.