டெல்லி ஃபெரோஷ கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டெல்லி அணி வெற்றிபெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்ற முனைப்புடனும், பெங்களூரு அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் எனவும் விளையாடி வருகின்றன. இதனால், இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. கிறிஸ் மோரிஸுக்கு பதிலாக லெமிச்சானே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், பெங்களூரு அணியில் டிம் சவுதி, அக்ஷ்தீப் நாத், மொயின் அலி ஆகியோருக்கு பதிலாக கிளாசன், ஷிவம் துபே, குர்கிரட் சிங் மான் அணியில் தேர்வாகியுள்ளனர்.
டெல்லி அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பந்த், காலின் இங்ரம், சந்தீப் ரூதர்ஃபோர்டு, அக்சர் படேல், ரபாடா, லெமிச்சானே, இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா.
பெங்களூரு அணி விவரம்: விராட் கோலி(கேப்டன்), பார்திவ் படேல், டி வில்லியர்ஸ், மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஹென்ரிச் கிளாசன், ஷிபம் துபே, குர்கிரட் சிங் மான், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், சாஹல், நவ்தீப் சைனி