ETV Bharat / sports

தோனி அதிரடியில் 160 ரன்களை எடுத்தது சென்னை அணி! - ராயுடு

சென்னை: பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 161 ரன்களை சென்னை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தோனி
author img

By

Published : Apr 6, 2019, 6:16 PM IST

இன்றைய போட்டியில் சென்னை- பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரர்களாக வாட்சன் - டூ ப்ளஸிஸ் இணை களமிறங்கியது.

இந்த இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து சிறப்பாக ஆடியது. ஒருமுனையில் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினாலும், மறுமுனையில் வாட்சன் அடக்கி வாசித்து வந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 56 ரன்கள் எடுத்த நிலையில், வாட்சன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் நட்சத்திர வீரர் ரெய்னா களமிறங்க, சென்னை அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய டூ ப்ளஸிஸ் ஐபிஎல் தொடரில் தனது 10வது அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து 54 ரன்களில் டூ ப்ளஸிஸ் வெளியேற, அடுத்த பந்தில் ரெய்னா 17 ரன்களில் போல்டானார்.

இந்நிலையில், 13.4 ஓவரிகளில் 100 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி ரன் குவிக்கத் தடுமாறியது. பின்னர் கேப்டன் தோனி - ராயுடு இணை களத்திலிருந்தது. தொடக்கத்தில் இந்த இணை நிதானமாக ஆட, சென்னை அணி 16 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் சென்னை அணி ரன் குவிக்கத் திணறியது. 19-வது ஓவரை வீசிய சாம் கரண் ஓவரின் முதல் பந்திலேயே தோனி சிக்ஸர் அடிக்க, சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் தோனி. அந்த ஓவரில் சென்னை அணி 19 ரன்களை சேர்த்தது.

பின்னர் கடைசி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ராயுடு சிக்ஸ் அடிக்க, தொடர்ந்து ஒரு ரன் எடுத்து தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். மூன்றாவது பந்தில் தோனி பவுண்டரி அடிக்க, அடுத்த மூன்று பந்துகளில் பந்துகளில் மூன்று ரன்கள் எடுக்கப்பட்டது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 23 பந்துகளில் 37 ரன்களும், ராயுடு 15 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Intro:Body:

CSK vs KX1P toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.