12 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் வெற்றி பெற்றதையடுத்து இரண்டாவது போட்டியில் களம் காணவுள்ளனர்.
இந்த ஐபிஎல்-ல் டெல்லி அணி சொந்த மண்ணில் முதல் போட்டியில் களமிறங்கவுள்ளதால், டெல்லி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டெல்லி அணியைப் பொறுத்தவரையில், முதல் போட்டியில் அபாரமாக ஆடி வலிமையான மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ளதால் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப ஸ்ரேயஸ் ஐயர், ப்ரித்வி ஷா, விஹாரி, ரிஷப் பந்த் என மிகச் சிறந்த வீரர்களுடன் விளையாடுகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் மும்பைக்கு எதிராக ஆடிய ஆட்டம், மற்ற அணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை ரபாடா, போல்ட், இஷாந்த், கீமோ பவுல், மோரிஸ் என்று மிரட்டலாக இருப்பதால் டெல்லி அணி, சென்னை அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பாண்டிங் - கங்குலி கூட்டணியின் ஆலோசனைகள் உள்ளதால் சென்னை அணி கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.
அதேபோல், சென்னை அணியின் பேட்டிங்கைப் பார்த்தால் வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி, பிராவோ, பில்லிங்ஸ் என சிறப்பாக இருந்தாலும், அனைவரும் தங்களது பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல், முதல் போட்டியில் ஹர்பஜன், தாஹிர், பிரேவோ, தீபக் சாகர், வாட்சன் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளதால் டெல்லி அணி, ரன் குவிக்க தடுமாறும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், டெல்லி அணி வெளியிட்ட வீடியோவில் ரிஷப் பந்த் சென்னை அணிக்கு சவாலளிக்கும் விதமாக பேசியுள்ளதால் தோனி ரசிகர்களிடையே இந்த போட்டி மிகப்பெரிய தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களிடையே தோனி - பந்த் இடையே ரிவல்ரி போர் நடைபெற்று வருவது குறிப்படத்தக்கது.