ETV Bharat / sports

சிஎஸ்கே என்பது பெயரல்ல; அது ஒரு உணர்வு! - ஐபிஎல் 2018

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் ஆஸ்தான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்த்து களமாட காத்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ்
author img

By

Published : Mar 22, 2019, 7:09 PM IST

சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1460 நாட்களில் ஒரு போட்டியில் மட்டுமே சென்னையில் விளையாடியிருக்கிறது. கடந்த ஆண்டு தடை காலம் முடிந்து களமாடக் காத்திருந்த அணிக்கு, காவேரி பிரச்சனையின் காரணமாக முதல் போட்டியோடு புனேவிற்கு மாற வேண்டிய கட்டாயம்.

dhoni - kohli
தோனி - கோலி

சென்னை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையின் ஆட்டத்தை பார்க்க நீண்ட நாட்களாக தவம் கிடந்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல!

மேட்ச் பிக்ஸிங்கும்; ரசிகர்களும்

2013-ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி 2015-ம் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

இரண்டு அணிகளும் தடை செய்யப்பட்டாலும், வீரர்களுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை. இருஅணி வீரர்களும் குஜராத், புனே அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றனர்.

ஆனால், சென்னை ரசிகர்களுக்கோ சென்னை அணியைக் காண வேண்டும் என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகமானது. இதன் மூலம் சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. இதன்மூலம் சென்னை அணியை உணர்வுபூர்வமாக மனதளவில் ஏற்றுக்கொள்ளத் தயாராகத் தொடங்கினர் ரசிகர்கள்.

மேலும், சென்னையில் யெல்லோ ஆர்மி (yellove army) என்ற ஒரு குழுவின் மூலம் ஒரே நேரத்தில்13 ஆயிரம் ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடி சென்னை அணி திரும்பி வர வேண்டும் என கேட்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் இந்த பேச்சு அதிகமானது.

ஆனால் அதற்கு நேரெதிராக தடை செய்யப்பட்ட ராஜஸ்தான் அணியைப் பற்றி யாரும் சிந்திக்ககூட இல்லை. அதுதான் வீரர்களை ஆச்சரியமடைய வைத்தது.

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

இரண்டு ஆண்டுகள் தடைக் காலம் முடிந்து திரும்புகையில், தோனியை சென்னை அணி ரீடெய்ன் செய்தது. தோனி அதற்கான பத்திரங்களில் கையெழுத்து போடுகையில், தோனியின் மனைவி சாக்‌ஷி கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலானது.

அவர் கூறிய வார்த்தைகளால் தோனி மட்டுமல்ல, தமிழ்நாடே குதூகலமானது.. அது, 'பேக் ஹோம் மாஹி..' என்பதுதான். சென்னை அணி மீதான இணைப்பு தோனிக்கு உணர்வுபூர்வமானது என்பதை அவ்வார்த்தைகள் உறுதி செய்தது. தொடர்ந்து அணியைக் கட்டமைக்கத் தொடங்கினர் சென்னை நிர்வாகமும், தோனியும்.

dhoni
தோனி

ஏலத்தில் பெரும்பாலும் பழைய சென்னை அணி வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டூ ப்ளஸிஸ் என அதே அணியோடு வாட்சன், ராயுடு, ஹர்பஜன், சாம் பில்லிங்ஸ், கரண் சர்மா என புதிய வீரர்களோடு 2018-ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கு தயாரானது சென்னை அணி.

சென்னை அணி வீரர்களுக்கென ஒரு நிகழ்ச்சி நிர்வாகத்தினர் சார்பாக தயார் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தோனி பேசுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் ஐபிஎல்-ல் இல்லை. ரசிகர்களுக்காகத் தான் இந்த சீசனை ஆடபோகிறோம். இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் கொடுத்த அன்பு விலை மதிப்பில்லாதது' என கண்ணீருடன் பேச முடியாமல் தவித்து உட்காரச் சென்றார்.

இது மற்றவீரர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமெல்லாம் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி, கண் கலங்கியதை யாராலும் நம்ப முடியவில்லை. புதிய வீரர்களும் உணர்வுபூர்வமாக அணியுடன் ஒன்றினர்.

அதன் வெளிப்பாடு தான் மும்பை அணியின் ஹர்பஜன் சென்னை அணிக்காக விளையாடியத் தொடங்கிய போது தமிழில் ட்வீட் போட செய்தது.

ஐபிஎல் தொடங்குகையில், கோப்பையை வெல்லப்போவது நாங்கள்தான் என சொல்லும் வகையில், திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என ஒவ்வொரு ரசிகர்களும் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இதனைக் கண்ட அணி நிர்வாகமும், அதையே சென்னை அணி வருகைக்காக பயன்படுத்திக் கொண்டது.

ஐபிஎல் போட்டிகளின் வீரர்களின் தேர்வின்போது, வீரர்கள் அனைவரும் 30க்கும் மேற்பட்ட வயதினை கடந்திருந்தார்கள். அதனால் டாடீஸ் டீம், அங்கில்ஸ் டீம் என பிற அணியின் ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர்.

மேலும், போட்டி தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்னை அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போதுதான் நிர்வாகமும் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காததை செய்தது. பயிற்சியில் ஈடுபடுவதை ரசிகர்கள் பார்க்க மைதானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு வந்த ரசிகர்களின் அளவு 14 ஆயிரம். ஆனால் சென்னை அணியினர் பயிற்சி செய்வதை பார்க்க வந்த மக்கள் 15 ஆயிரத்திற்கும் மேல். பயிற்சியின்போது, தல தோனி மைதானத்திற்குள் வந்ததும் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் அப்போதே விண்ணைப் பிளந்தது.

சென்னை அணியின் முதல் போட்டி :

அனைத்தையும் நிர்வாகம் தரப்பிலும் வீரர்கள் தரப்பிலும் செய்தாகிவிட்டது. முதல் போட்டி சென்னை அணியின் ரிவல்ரி அணியான மும்பையுடன். அதுவும் வான்கடே மைதானத்தில். அந்த போட்டியில் கிட்டத்திட்ட தோல்வி முடிவாகியிருந்த நிலையில், பிராவோ ஆடிய அந்த இன்னிங்ஸ் சென்னை அணியின் டாக் லைனான திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்பதை உறுதி செய்தது. வான்கடேவில் வெற்றி பெற்றதையடுத்து, அனைவரும் எதிர்பார்த்த சென்னையின் இரண்டாம் போட்டி. சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. காவேரி பிரச்சனையால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அந்த போட்டியில் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஆடி வென்றிருந்தாலும், அதன்பிறகு புனேவிற்கு போட்டிகள் மாற்றப்பட்டது.

இதனால் மனமுடைந்த ரசிகர்கள், சென்னை அணி ஆட்டத்தைக் காண முடியாமல் போனது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆட போகிறோம் என்ற தோனியுன் ஆசையும் முழுதாக நிறைவேறாமல் போனது.

விசில்போடுஎக்ஸ்பிரஸ் :

சென்னை ஆட்டம் புனேவில் நடந்தால் என்ன.. நாங்கள் நேரில் பார்க்க வருகிறோம் என புனேவிற்கு கிளம்பினர் சென்னையின் ரசிகர்கள். 48 மணி நேரம் பயணம் செய்து நான்கு மணி நேரப் போட்டியை பார்ப்பதற்காக புனே சென்றனர். அது சென்னை வீரர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

csk fans
புனேவுக்கு சென்ற ரசிகர்கள்

தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் தோனி ஆடிய ருத்ர தாண்டவம், ப்ளே ஆஃப் சுற்றில் டூ ப்ளஸிஸ் ஆடிய ஜென்டில்மேன் இன்னிங்ஸ் என சென்னை ஒவ்வொரு முறையும் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

csk fans
புனேவுக்கு சென்ற ரசிகர்கள்

கோப்பை வென்ற நிமிடமும் இந்த ஐபிஎல்-ம்:

தொடர்ந்து ஹைதராபாத் அணியை சென்னை அணி இறுதிப்போட்டியில் வாட்சனின் அபாரமான ஆட்டத்தால் வென்று ஐபிஎல்-ல் மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. டாடிஸ் டீம் என கிண்டலடிக்கப்பட்ட அணி தங்களது குழந்தைகளுடன் மைதானத்தை சுற்றி வந்தனர்.

watson
வாட்சன்

அப்போது தோனி கூறியது ஒன்று தான்.. சென்னை அணி மிகவும் உணர்வுபூர்வமான அணி. இந்தியர்களுக்கு செண்டிமண்ட் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அதேபோல் தான் சென்னை அணி வீரர்களும்.

உண்மைதான். ராயுடு சதமடித்தற்கு சென்னை அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய மார்க் வுட் தனது நண்பர்களுடன் இங்கிலாந்திலிருந்து கொண்டாட வைத்தது தான் அந்த உணர்வு. அதனால் தான் ரசிகர்கள் சொல்கிறார்கள். சிஎஸ்கே என்பது அணியல்ல.. அது ஒரு உணர்வு.

csk
சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. எந்த நகரத்தில் கடந்தாண்டு விளையாட முடியாமல் வெளியே சென்றார்களோ, இந்த ஆண்டு அதே நகரத்தில் அதே மைதானத்தில் முதல் போட்டியை அறிவித்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை மெரினாவில் மஞ்சள் சாயம் அதிகமாகவே இருக்கபோகிறது. சிஎஸ்கே என்னும் கரகோஷம் விண்ணை பிளக்க காத்திருக்கிறது. சென்னையின் சிறுவர்கள் சென்னை அணியின் மஞ்சள் டி-சர்ட்டை போட்டு சுற்ற தொடங்கிவிட்டார்கள்.

சிங்கத்தின் கோட்டையில் கிங் கோலியின் பெங்களூர் அணி விளையாட வந்துவிட்டது. நாளை சென்னை கர்ஜனை தொடக்கம்.. தல தோனி பராக்.. சென்னை சூப்பர் கிங்ஸ் பராக்.. சும்மா பெரிய விசிலோட சென்னை அணியை வரவேற்போம்.

Intro:Body:

CSK reentry rewind

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.