ETV Bharat / sports

சென்னையிடம் வீழ்ந்த டெல்லி!

author img

By

Published : May 1, 2019, 11:51 PM IST

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரெய்னா 59, தோனி 44 ரன்களை விளாசினர்.

இதைத்தொடர்ந்து, 180 ரன் இலக்குடன் ஆடிய டெல்லி அணி, சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அணியில் பிரித்விஷா (4), ஷிகர் தவான் (19), ரிஷப் பந்த் (5), காலின் இங்ரம் (1), அக்சர் படேல் (9), ரூதர்ஃபோர்டு(2), கிறிஸ் மோரிஸ் (0), ஜெதீசா சுசித் (6), அமித் மிஷ்ரா (8) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் நான்கு, ஜடேஜா மூன்று, தீபக் சஹார், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதன் மூலம் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியால் சென்னை அணி 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.