ETV Bharat / sports

மும்பைக்கு 100ஆவது வெற்றி; ஆனாலும் சென்னைதான் டாப்! - MIvCSK

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் மும்பை அணி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 வெற்றிகளை கண்ட முதல் அணி என்ற சாதனை படைத்துள்ளது.

மும்பை
author img

By

Published : Apr 4, 2019, 2:55 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. மும்பை அணி தனது 175ஆவது போட்டியில் இச்சாதனையை எட்டியுள்ளது.

அவர்களுக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 152 போட்டிகளில் 93 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வெற்றிவிகிதம் அடிப்படையில் மும்பை அணியைக் காட்டிலும் சென்னை அணிதான் முதலிடத்தில் உள்ளது. 175 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகள் பெற்ற மும்பை அணியின் வெற்றி விகிதம் 57. 1 விழுக்காடாகதான் உள்ளது. ஆனால் 152 போட்டிகளில் 93 வெற்றிகள் பெற்ற சென்னை அணியின் வெற்றி விகிதம் 61.1 விழுக்காட்டைப் பெற்றுள்ளது.

சூதாட்ட விவகாரம் தொடர்பாக சென்னை அணி, 2016, 2017 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அப்படி இல்லை என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 வெற்றிகள் என்ற மைல்கள் சாதனையை சென்னை அணி எப்போதோ அடைந்திருக்கும் என அந்த அணி ரசிகர்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

அதிக போட்டிகள் வெற்றிபெற்ற அணிகளின் விவரம்: (அடைப்புக்குறிக்குள்... போட்டிகள்)

  1. மும்பை இந்தியன்ஸ் - 100 வெற்றி, (175)
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் - 93 வெற்றி (152)
  3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 88 வெற்றி ( 167)
  4. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 79 வெற்றி (166)
  5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 79 வெற்றி (171 )
  6. ராஜஸ்தான் ராயல்ஸ் - 71 வெற்றி (137)
  7. டெல்லி கேபிட்டல்ஸ் - 69 வெற்றி (165)
  8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 54 வெற்றி (96)

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.