ETV Bharat / sports

தல தோனியுடன் மோதும் அஸ்வின்- வெற்றி யாருக்கு? - அஷ்வின்

சென்னை: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

தல உடன் மோதும் அஷ்வின்
author img

By

Published : Apr 6, 2019, 9:59 AM IST

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை நான்கு மணிக்கு தொடங்கும் போட்டியில், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில், மூன்று வெற்றி, ஒரு தோல்வி என ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி மூன்றாவது இடத்திலும், சென்னை அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

சென்னை அணியை பொறுத்த வரையில், தொடக்க வீரரான ராயுடு மோசமான ஃபார்மில் உள்ளார். இந்தத் தொடரில் அவர் விளையாடிய நான்கு போட்டிகளில் 34 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அவருக்கு பதிலாக முரளி விஜய் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதல் மூன்று போட்டிகளில் பவுலிங், ஃபீல்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி, மும்பை அணிக்கு எதிராக விளையாடிய கடைசி போட்டியில் மிகவும் மோசமாகவே செயல்பட்டது. அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக அவதிபட்டு வருவதால், அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பஞ்சாப் அணியை பொறுத்த வரையில், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்றாலும், சென்னை அணி குறித்தும், சேப்பாக்கம் ஆடுகளம் குறித்தும் அவர் நன்கு பரிட்சயமானவர். இதனால், சென்னை அணிக்கு எதிராக அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடாத கெயில், இம்முறை சென்னை அணிக்கு எதிராக விளையாடவுள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வரும் அவரை சென்னை அணி எவ்வாறு கட்டுப்படுத்தும் என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் பஞ்சாப் வீரர் சாம் கரணின் பந்துவீச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி சமாளிக்க போகிறது என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை அணி 11 ஆட்டங்களிலும், பஞ்சாப் அணி 9 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில், 14 வெற்றிகளை பதிவு செய்துள்ளதால், சேப்பாக்கம் மைதானத்தில் அந்த அணியின் வெற்றி தொடருமா என்பது இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.